காதலியை தீ வைத்து எரித்துவிட்டு தன்னையும் எரித்துக்கொண்ட மாணவர்!

Report Print Deepthi Deepthi in இந்தியா
1942Shares
1942Shares
lankasrimarket.com

கேரள மாநிலத்தில் தனது காதலை நிராகரித்த காதலியை தீவைத்து எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயத்தில் உள்ள மருத்துவ கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆதர்ஷ்(26), என்பவரும் அதே கல்லூரியில் பிசியோதெரபி பயின்று வந்த லட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு சில காரணங்களுக்காக லட்சுமி ஆதர்ஷின் காதலை நிராகரித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஆதர்ஷ் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கு கல்லூரி வளாகத்தில் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த லட்சுமியின் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். இதனால் அலறியடித்து லட்சுமி அங்கிருந்து ஓடியுள்ளார்.

விடாது பின் தொடர்ந்து துரத்திய ஆதர்ஷ் அவர் மீது தீ வைத்துள்ளார். அதன் பின்னர் தன் மீதும் பெட்ரோல் ஊற்ற தீவைத்துக்கொண்டார். இதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments