மும்பையில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பேஸ்புக் நேரலை வீடியோவை சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்குமாறு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் அருண் பரத்வாஜ்(23), இவர் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com படித்து வருகிறார்.
நேற்று பிற்பகல் அருண் அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார், அதன் பின்னர் மாலை 6.30 மணி அளவில் ஹோட்டலின் 19 வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் ஜன்னல் கதவை உடைத்து அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவை பேஸ்புக் நேரலையில் அருண் பதிவிட்டுள்ளார்.
எப்படி தற்கொலை செய்து கொள்வது என்பதற்கான வீடியோ இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஹோட்டலின் அறைகளில் இருந்து சில கடிதங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அதில், தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து வெளியே வர முடியாததால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அருண் மிகுந்த மன அழுத்தில் இருந்ததாரா என்று அவரது நண்பர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Deeply bereaved with suicide of a young boy in the city. We urge the youngsters to reach out to us #WeAreListening
— Mumbai Police (@MumbaiPolice) 3 April 2017
அதேபோல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய மாணவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ பதிவை நீக்குமாறு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.