ஜெயலலிதா மரணமடையும் முன்னரே! மனோபாலா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

Report Print Raana in இந்தியா
597Shares
597Shares
ibctamil.com

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், காமெடி நடிகராகவும் இருப்பவர் மனோபாலா. இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியில் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார்.

அரசியல் நிலை குறித்து அவர் பேசிய பேட்டி ஒன்று ஊடகத்தில் சமீபத்தில் வெளியானது. அவர் அதில் பேசியதாவது நான் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவை பார்ப்பதற்காக மருத்துவமனை சென்றேன். அங்கு சிறு பரபரப்பு இருந்தது.

லிஃப்டில் மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் அத்தனை எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஒரே மௌன களமாக இருந்தது. எனக்கு சினிமா படம் பார்ப்பது போல இருந்தது.

ஒரு அமைச்சரின் மைத்துனர் வேகமாக என்னிடம் வந்து அண்ணா ஷூட்டிங் இருந்தால் உடனே கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க என்று கூறினார்.

ஏதோ நடக்கப்போகிறது என நினைத்து நானும் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தேன். மறுநாள் வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

நான் ஏன் கேன்சல் செய்தேன் என இதுவரைக்கும் புரியவில்லை என அவர் கூறினார். ஆனந்த் ராஜ், விந்தியா ஆகியோரை பாராட்டுகிறேன். அவர்களை போல எனக்கு தைரியமில்லை என பேசினார்.

டிசம்பர் 5ம் தேதிதான் முதல்வர் ஜெயலிதா இறந்ததாக வெளிஉலகிற்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments