ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்: உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்

Report Print Arbin Arbin in இந்தியா

மராட்டிய மாநிலம் மும்பையில் ரயிலில் ஏற முயன்றபோது கீழே விழுந்த இளஞரை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பரேல் ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் இன்று காலை 8.50 மணியளவில் ஒரு புறநகர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவசரம் அவசரமாக ஓடிச்சென்று ஒரு பெட்டியில் ஏறியுள்ளார். ஆனால், கால் தவறி அவர் விழுந்துவிட்டார். விழுந்த அவர், ரெயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

அப்போது பிளாட்பாரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள்கள், அந்த இளைஞரை கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே இழுத்துள்ளனர். இதனால், அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்த அந்த இளைஞர் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த வினோத் லட்சுமணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. லேசான காயமடைந்த அவருக்கு ரயில்வே மருத்துவவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் முழுவதும் பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காணொளியை ரயில்வே பாதுகாப்பு படை தற்போது வெளியிட்டுள்ளது.

ஓடும் ரயிலில் ஏறுவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர்த்தும் வகையில், இந்த காணொளி பதிவு உணர்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments