ஒவ்வொரு நாளும் குண்டாகும் பச்சிளம் குழந்தை: அதிர்ச்சியில் பெற்றோர்

Report Print Peterson Peterson in இந்தியா
272Shares
272Shares
lankasrimarket.com

இந்தியாவில் பெற்றோருக்கு பிறந்த குழந்தை ஒன்று சரசாரி குழந்தைகளை விட மிகவும் பருமனாக வளர்ந்து வருவது பெற்றோரையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் பெற்றோர் இருவருக்கு 8 மாதங்களுக்கு முன்னர் Chahat Kumar என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்தபோது பிற குழந்தைகள் போல சராசரி எடையுடன் இருந்துள்ளது. ஆனால், 4 மாதங்களை கடந்ததும் குழந்தையின் பருமன் வளர்ச்சி அசுரத்தனமான வேகத்துடன் தொடங்கியுள்ளது.

தற்போது 8 மாதம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்குழந்தையின் உடல் எடை 17 கிலோவாக அதிகரித்துள்ளது.

உடல் எடைக்கு ஏற்றவாறு இக்குழந்தை அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது.

அதாவது, ஒரு 10 வயது சிறுமி எப்படி சாப்பிடுகிறாரோ அது போல் இக்குழந்தையும் கிடைத்தவை அனைத்தையும் சாப்பிட்டு வருகிறது.

இது குறித்து தாயார் பேசியபோது ‘எங்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், உடல்நிலைக்காரணமாக ஆண் குழந்தை இறந்துவிட்டது.

தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையின் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது’ என வேதனை தெரிவித்துள்ளார்.

குழந்தையின் அசுரத்தனமான வளர்ச்சி குறித்து மருத்துவர் பேசியபோது, ‘குழந்தையின் வளர்ச்சி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய மருத்துவ அனுபவத்தில் 4 மாதத்திற்கு பிறகு ஒரு குழந்தை இவ்வளவு வேகமாகவும் மிகவும் பருமனாகவும் வளர்வதை இப்போது தான் பார்க்கிறேன்.

இக்குழந்தையின் உடலில் என்ன நிகழ்கிறது என்பதை இப்போது உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மேல் சிகிச்சைக்காக நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால், பெற்றோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு அரசாங்கத்திடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments