பெற்ற குழந்தைகளிடமே செய்யும் தொழிலை மறைத்த தந்தை

Report Print Arbin Arbin in இந்தியா

தான் செய்யும் தொழில் குறித்து அறிய வந்தால், தங்கள் குழந்தைகள் வெளியிடங்களில் அவமானப்படுத்தப்படுவர் என்று கருதியதால், துப்புரவு பணியாளர் ஒருவர் பெற்ற குழந்தைகளிடமே தனது வேலை குறித்த தகவல்களை மறைத்த சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் துப்புரவு பணியாளரின் பெயர் குறித்த சுயவிபரங்கள் வெளியிடப்படவில்லை, புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், எனது குழந்தைகள் வெளியிடங்களில் அவமானப்படுத்தப்படாமல் இருக்க நான் துப்புரவு பணியாளர் என்பதையே அவர்களிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.

பணி முடிந்து வீட்டிற்கு செல்லும்முன் பொதுகுளியலறையில் குளித்துவிட்டுத்தான் செல்வேன். இந்த தொழிலின் மூலம் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசையும், அவர்களின் படிப்பிற்காகவே செலவிட்டேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒருசமயத்தில் மூத்த மகளின் மேற்படிப்பிற்காக பணம் அதிகமாக தேவைப்பட்டது, அப்போது கவலையுற்றிருந்த நேரத்தில் தன்னுடைய சக பணியாளர்கள் அவர்களது தினக்கூலியை தனக்கு தந்து உதவியதாகவும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

பெண்களின் கல்விக்காக நாங்கள் ஒருநாள் பட்டினி கிடந்தால் ஒன்றும் ஆகிவிடமாட்டோம் என்று அவர்கள் கூறியது நெஞ்சை நெகிழ வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

தனது மகள்களை நன்றாக படிக்கவைத்தபடியால் தான் ஒருபோதும் ஏழையாக உணர்ந்ததில்லை எனவும், இனிமேல் நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை அவர்களிடம் தாராளமாக கூறுவேன் என்றும் அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ள நிலையில், குறித்த நபருக்கு பல்வேறு தரப்பிலிருந்து நிதியுதவிகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments