ரஜினி வெளிப்படையாக இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று சொல்லுவாரா? சீமான் அதிரடி கேள்வி

Report Print Deepthi Deepthi in இந்தியா

ரஜினி தன்னுடைய ரசிகர்களை நீண்ட வருடம் கழித்து அண்மையில் தான் சந்தித்தார். தொடர்ந்து 5 நாட்கள் சந்தித்த இவர் முதல் நாள் மற்றும் கடைசி நாளில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருந்தார். அதில் இருந்து அரசியல்வாதிகள் ரஜினியை பற்றி விமர்சித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் சீமான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ரஜினியை பற்றி பேசும்போது, வெளிப்படையாக கபாலி படத்துக்கு அவர் இவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று கூற முடியுமா? எவ்வளவு வரி செலுத்தினார் என்று அவர் கூறுவாரா என பேசியுள்ளார். அவர் தன்னை நேர்மையானவர் போல் காட்டிக் கொள்கிறார்.

எனக்கு தெரிந்த வரை கமல்ஹாசன், மாதவன் போன்றவர்களிடம் கருப்பு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments