சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகை சர்ச்சை: டிடிவி தினகரன் கூறுவது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

சசிகலாவுக்கு சிறையில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

மேலும், அவர் சிறையிலிருந்து ஷொப்பிங் செல்வது உள்ளிட்ட படக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன், சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

சிறையில் உள்ளவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா குறித்த சிறை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் டிடிவி தினகரன் அதனை மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments