மருத்துவமனையில் அனுமதி மறுப்பு: மகளைப் பறிகொடுத்த தந்தை கதறல்

Report Print Arbin Arbin in இந்தியா
576Shares
576Shares
lankasrimarket.com

பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தன் மகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தந்தை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியில் இருந்து ஆறு நாட்களாக கடும் காச்சலால் அவதிப்பட்டுவரும் தமது மகளை அழைத்துக் கொண்டு தந்தை ஒருவர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் குறித்த சிறுமியை சிகிச்சைக்காக அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், சிறுமி உயிரிழந்துள்ளதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயே சிறுமி இறந்ததாகக் கூறப்படுவதால், இந்த விடயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இறந்த சிறுமியின் தந்தை ஆம்புலன்ஸ் வசதி கேட்டும் மருத்துவமனை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டதால், தன் தோளிலேயே சடலத்தைத் தூக்கிச் சென்றுள்ளார்.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் பிரபாத் கே.சிங், என்ன விடயம் நடந்தது என்பதே சரியாகப் புரியவில்லை. சிறுமி குறித்து மருத்துவமனையில் யாரும் அறிந்திருக்கவில்லை.

பின்னர், எப்படி இந்தக் குற்றம் சுமத்தப்படுகிறது. எனக்கு அந்த சிறுமி இறந்தது குறித்து சந்தேகம் உள்ளது.

மருத்துவமனையில் மிக நீண்ட வரிசை இருப்பதைப் பார்த்து, அவர் தந்தை திரும்பச் சென்றதால், அந்த சிறுமி இறந்தாரா என்று எண்ணத் தோன்றுகிறது' என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் இந்த மனிதாபிமானமற்ற பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்