திருமணமான 2வது நாளிலேயே நகைகளுடன் ஓடிய மணப்பெண்: நூதன முறையில் கொள்ளை

Report Print Kabilan in இந்தியா
441Shares
441Shares
lankasrimarket.com

திருமணமான 2வது நாளே நகைகளுடன் மணப்பெண் ஓடிய சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியின் குவான் ஹீடி எனும் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் தியாகி. இவருக்கும் டேராடூனைச் சேர்ந்த கயா என்ற பெண்ணிற்கும் கடந்த 22ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

மணமகளுக்கு, மணமகன் சார்பாக தங்க, வெள்ளி நகைகள் அணிவித்துள்ளனர். இந்நிலையில், கயா தனக்கு உடல்நிலை சரி இல்லை என கூறியதைத் தொடர்ந்து, தியாகி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். செல்லும் வழியில் கயா, தனக்கு இறைச்சி உணவு வேண்டும் என கேட்டுள்ளார். அருகே உணவகங்கள் எதுவும் இல்லாததால் உத்தரபிரதேசத்தின் எல்லை அருகே உள்ள புர்காசி என்ற நகருக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும், தனக்கு குளிர்பானம் வேண்டும் என தியாகியிடம் கயா கேட்டுள்ளார். தியாகி அதனை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது கயா அங்கு இல்லை. தியாகி சுமார் 4 மணிநேரமாக தேடியும் கயா கிடைக்கவில்லை.

கயாவிற்கு அணிவித்த தங்க, வெள்ளி நகைகளுடன் அவர் ஓடிவிட்டார் என்று பின்னர் தான் தெரிந்தது. இது குறித்து நர்சான் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்