தமிழக மக்களுக்காக நல்லது செய்வேன்: நடிகை நமீதா

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகை நமீதா சமீபத்தில் தனது காதலரான வீரா என்பவரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலநதுகொண்டு மக்கள் மத்தியில் அதிக வெறுப்புகளை சம்பாதித்த இவர், அதுகுறித்து எந்த ஊடகத்திற்கும் பேட்டியளிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு, தனது கணவருடன் சேர்ந்து பேட்டியளித்த இவர், தமிழக மக்களுக்காக எதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.

அதிமுக கட்சியில் இருக்கிறேன், அது நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. இருப்பினும், அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றும் அதுகுறித்த முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers