ஆந்திர மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் ஆண் போன்று வேடமிட்டு 3 பெண்களை திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வந்த ரமாதேவி(21) தன்னுடன் பணியாற்றிய சாந்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ரமாதேவி ஒரு பெண் என்பது கூட தெரியாமல், சாந்தியும் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பின்னர்தான் ரமாதேவி ஒரு பெண் என்பது தெரியவந்ததையடுத்து, தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சாந்தியின் பெற்றோர் ஜம்மலமொடுகு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார், சாந்தியை மீட்டதுடன் ரமாதேவியை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் சாந்தி மட்டுமல்ல, இதற்கு முன்னர் இரு பெண்களையும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிவந்தது.
பெண்ணாக இருந்து கொண்டு பெண்களையே திருமணம் செய்துகொள்ள காரணம் என்ன? என பொலிசார் கேட்டதற்கு, எனக்கு ஆண்களைப் பிடிக்கவில்லை என்றும் எனவேதான், ஆண் போல வேடமிட்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.