ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சை: நீதிமன்றம் உத்தரவு

Report Print Harishan in இந்தியா

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து தொடர்பான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து மதக்கடவுள் ஆண்டாள் குறித்து மேற்கத்திய ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி ’தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டார் கவிஞர் வைரமுத்து.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஹிந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக வைரமுத்துவை விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவாகவும், அவர் கூறியதில் தவறு இல்லை என்ரும் பல தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வைரமுத்து மீது ஹிந்து அமைப்பினர் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி வைரமுத்து சார்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஆய்வை மேற்கோல் காட்டி தான் வைரமுத்து பேசியுள்ளார், அது வைரமுத்துவின் சொந்த கருத்துகள் இல்லை.

அதனால் அவர் மீதான வழக்குகளின் மீது தற்போது விசாரணை நடத்த இடைக்காலத்தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்