பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி: சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்தின் செயல்

Report Print Kabilan in இந்தியா

சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தனது பயணத் திட்டம் குறித்து தெரிவித்தார், அதன் பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ’தமிழகத்தில் 2 பெண்கள் இறந்துள்ளார்கள், பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி உள்ளது?’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

ஆனால், கேள்வியை முடிக்கும் முன்னரே ரஜினிகாந்த், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூறி திரும்பி சென்றுவிட்டார்.

மேலும், அவரின் பின்னால் தொடர்ந்து கேள்விக்கு பதில் கேட்ட பத்திரிக்கையாளர்களை அவர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...