மருத்துவமனை வாசலில் உயிரிழந்த பிச்சைக்காரர்: கேள்விக்குறியான மனிதாபிமானம்

Report Print Fathima Fathima in இந்தியா

மும்பையில் மருத்துவமனை வாசலில் பிச்சைக்காரர் ஒருவர் பரிதாபமாய் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பை நகரில் டிட்வாலா ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் சந்துமாமா.

தினமும் இவருக்கு கணேஷ் என்பவர் பிச்சை போடுவது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரயில்வே நிலையத்தில் சந்துமாமாவை காணாததால் தேடிப் பார்த்தார்.

அருகில் இருக்கும் ஒரு ரூபாய் கிளினிக் அருகே அமர்ந்திருந்த சந்துமாமாவிடம் வழக்கம் போல் உணவு மற்றும் காசை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

மாலையில் வந்து பார்த்தபோது அதே இடத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

மருத்துவமனை பூட்டியிருந்ததால், உடனடியாக ரயில்வே பொலிசாருக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சந்துமாமாவை மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் உதவியுடன் தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்ததாகவும், சிகிச்சைக்காகவே மருத்துவனை சென்றிருக்கலாம் எனவும் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக தான் வந்தார் என தங்களுக்கு தெரியாது என ஒரு ரூபாய் மருத்துவமனை மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி பிச்சைக்காரருக்கு மனிதநேயத்துடன் யாரும் உதவி அளிக்காதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்