காமப்பெருமூச்சுகளால் சுட்டெரிக்கும் ஆண்கள்: பலாத்காரத்திற்கு இதுதான் காரணமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
509Shares

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்.

பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பராபட்சம் இன்றி ஆண்களின் காமப்பெருமூச்சுகளால் சுட்டெரிக்கப்படுகின்றனர்.

நிர்பயா என்ற மாணவி முதல் சமீபத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா வரை இதற்கு உதாரணம்.

2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே டெல்லியில் தான் பெண்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாத்காரத்திற்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் துச்சமாக நினைக்கும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் ஏராளம்.

வளர்க்கப்பட்ட விதமும், அவர்களது மனோபாவமும்தான் ஆண்கள் இதுபோன்ற சீண்டல்களில் ஈடுபடுவதற்கு அதிக காரணம்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவில், பல பெண்கள் தங்கள் கணவர் பெயரைக்கூட நேரடியாகச் சொல்வதில்லை என்பதிலிருந்து, இந்தியச் சமூகத்தில் ஆண்கள் தங்களை எந்த அளவுக்கு ஆதிக்க நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் ஒரு பக்கம் என்றால் போதை வஸ்துகளால் தங்களது நிலையை மறக்கும் ஆண்கள், தங்கள் கண்ணெதிரில் இருப்பது சிறு குழந்தைதானா என்பது கூட அறியாமல், அரக்க வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அதிகமாக பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு, பெண்கள் உடுத்தும் ஆடைகள் தான் காரணம் சில சமூகஆர்வலர்கள் காரணம் தெரிவித்தாலும், அதனை பார்க்கும் விதத்திலும் அந்த ஆணின் பங்களிப்பு இருக்கிறது.

ஆடை காரணமா?

பெண்களுக்காக பிரத்யேகமான முறையில் பல்வேறு ஆடைகள் இருந்தாலும், எந்த ஆடை அவர்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் என்று யாரிடம் கேட்டாலும் “சேலை” என்ற தான் பதில் அளிப்பார்கள்.

ஏனெனில், சேலை தான் பெண்களின் உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்து காட்டுகிறது.

இதனால் பெண்களை சேலையில் பார்த்தவுடன் ஆண்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.

பெண்களின் ஆடை ஆண்களை தூண்டுவதால் தான் ஆண்கள், அவர்களை பலாத்காரம் செய்கின்றனர் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.

ஆனால், ஆடை மட்டுமே ஒரு பெண்ணை பிடிப்பதற்கு காரணம் இல்லை. அப்படி பார்த்தால் பள்ளி சிறுமிகள் கூட பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.

மாறாக, பெண் பால் என்றால் ஆண்களுக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையின் படைப்பு. அந்த ஈர்ப்பு ஆணுக்குள் கட்டுக்கடங்காமல் உணர்ச்சி பொங்கி எழும்நேரத்தில், ஒரு பெண்ணை பார்த்தால் அவனுக்கு பலாத்காரம் செய்ய தோன்றுகிறது.

ஒரு ஆண் எவ்வித காம உணர்வுகளும் இன்றி எந்த பெண்ணை பார்த்தாலும், அங்கு கற்பழிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

ஒரு ஆண் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்த பெண்ணை எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் தன் தாய், தங்கை, தோழி போல பார்க்கலாம்.

மற்றொருவன் முழுவதும் மூடிய உடையில் உள்ள பெண்ணைத் தவறான எண்ணத்திலும் பார்க்கலாம்.

இங்கு, பார்க்கும் பார்வையே வேறுபடுகிறதோ தவிர, ஆடைகள் எப்படி இருக்கிறது என்பது முன்வைக்கப்படவில்லை.

என்னதான், பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளால் ஆண்களை கவர்ந்திழுத்தாலும், இந்த ஆடை விடயம் என்பது இரண்டாம் விடயமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாறாக, ஆண் வர்க்கத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவதும், பெண் வர்க்கத்தால் ஆண்கள் ஈர்க்கப்படுவதும் பிறப்பில் உருவான ஒன்றே தவிர, உடலை மறைக்க பயன்படுத்தும் ஆடைகள் கிடையாது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்