தாலி கட்டும் நேரத்தில் நடந்த சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்திரபிரதேசத்தில் 24 வயது நபர் ஒருவர் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டும் நேத்தில் ஹீரோ போல் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மணவறையில் மணமகன் மற்றும் மணப்பெண் அமர்ந்திருந்தனர். தாலி கட்டநேரம் ஆகிவிட்டதால் அனைவரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சினிமா பாணியில் காதலன் பைக்கில் திருமண மண்டபத்துக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அனைவரும் அதிர்ச்சியடைந்தபடி பார்த்துக்கொண்டிருக்கையில், மணமகளின் கையை பிடித்து பைக்கிலேயே மணமகளை அழைத்து சென்றுள்ளார்.

சினிமாவில் மட்மே இதுபோன்ற காட்சிகளை பார்த்து பழகிய மக்களுக்கு நிஜத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது ஆச்சயரித்தை ஏற்படுத்தியது.

விசாரணையில், இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் அப்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை, வேறு ஒரு ஆணுக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும், காதலன் சரியான நேரத்திற்கு வந்து மணமகளை அழைத்து சென்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers