காதலனை கரம்பிடிக்க காதலி எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா
99Shares
99Shares
ibctamil.com

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது பெற்றோருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் காதலி ஓட்டம் பிடித்துள்ளார்.

திவ்யாவும், விஜயராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். விஜயராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இவர்களது காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சமைத்த உணவில் மயக்கம் ஏற்படும் வகையில் ஏதோ ஒரு பொருளை கலந்து அந்த உணவை பெற்றோருக்கும் உடன் இருந்த அக்காள் காயத்திரிக்கும் திவ்யா பரிமாறியுள்ளார்.

சற்றுநேரத்தில் அவர்கள் மயக்கம் அடைந்தவுடன் காதலன் விஜயராஜ் அங்கு வந்தார். பின்னர் திவ்யாவும் அவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பிச்சாண்டி, அம்பிகா மற்றும் காயத்திரி ஆகியோர் எழுந்தனர். மகள் திவ்யா காணாததை கண்டு விசாரித்தபோது அவர் காதலன் விஜயராஜுடன் ஓடிச்சென்றது தெரியவந்தது.

பின்னர் பிச்சாண்டி உள்பட 3 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது குறித்து திவ்யாவின் பெற்றோர், 15 பவுன் நகையுடனும், ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு தனது காதலனுடன் சென்றுவிட்டதாக பொலிசில் புகார் அளித்தனர்.

ஆனால், இதனை மறுத்த திவ்யா தனது விருப்பத்தின்பேரில் காதலனை திருமணம் செய்துகொண்டதாக பொலிசில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்