இறந்துபோனது கூட தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா
110Shares
110Shares
ibctamil.com

மேற்கு வங்க மாநிலத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் இறந்துபோன தனது சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

Sharbani Pal (64) என்பவர் தனது சகோதரர் Amarnath Pal(64) - உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அமர்நாத் பால் 3 நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால் சகோதரியோ தனது சகோதரன் இறந்துபோனது கூட தெரியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அருகில் வசிப்போர் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு வந்து பொலிசார் சோதனை செய்ததில், அமர்நாத் பால் இறந்து 3 நாட்கள் ஆனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவரது உடல் அப்புறப்படுத்தப்பட்டு, அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்