வாடகை பாக்கி வைத்த காரணத்திற்காக மூதாட்டியை சிறை வைத்த வீட்டு ஓனர்

Report Print Trinity in இந்தியா

சென்னை காசிமேட்டில் வாடகை பாக்கி வைத்த பாட்டி ஒருவரை வீட்டின் சொந்தக்காரர் அவரது வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்த சம்பவம் நடந்துள்ளது.

காசிமேடு மீன் வியாபாரி ரங்கநாதன், இவர் வீட்டில் பாப்பாத்தி என்பவர் குடியிருந்து வருகிறார். மூதாட்டியான பாப்பாத்தி பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக முழு வாடகையையும் தரும் வழக்கம் வைத்திருந்தார்.

கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்க முடியாமல் மூதாட்டி சிரமப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இதனால் வீட்டின் சொந்தக்காரர் ரங்கநாதனுக்கும், மூதாட்டிக்கும் நடுவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்பாத்தி அம்மாளை வீட்டில் பூட்டி விட்டு தன்னுடைய வீட்டையும் பூட்டிக்கொண்டு ரங்கநாதன் வெளியூர் சென்று விட்டார்.

காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த மூதாட்டி தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லியுள்ளார். இரவு முழுவதும் சாப்பிடாததால் நடந்த அதிர்ச்சி சம்பவத்திலும் மூதாட்டி வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.

இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் வந்து பூட்டை உடைத்து பாட்டியை மீட்ட நிலையில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்