தாயாரின் உடலை பதப்படுத்திய மகன்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இறந்த தாயாரின் உடலை அவரது மகன்கள் பதப்படுத்தி பாதுகாத்த சம்பவம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதையடுத்து, அமராவதி தேவி, ரூ.40 ஆயிரம் மாத ஓய்வூதியமாக பெற்று வந்தார். அவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், அமராவதி தேவி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டுக்காரர்கள், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்தப பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ஒரு அறையில் அமராவதியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரது கை பெருவிரலில் மை கறையும் இருந்தது.

அமராவதி தேவி, கடந்த ஜனவரி 13 ஆம் திகதியே இறந்து விட்டதும், அவரது விரல் ரேகையை பயன்படுத்தி, அவரது ஓய்வூதியத்தை பெறும் ஆசையில், 5 மகன்களும் அவரது உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அமராவதி தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக குறித்த 5 மகன்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers