தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேற: சசிகலா புஷ்பா மிரட்டல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி அப்பாவி பொதுமக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எம்பி சசிகலா புஷ்பாவும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை ஏன் மூட முடியவில்லை. லஞ்சம் வாங்கி விட்டீர்களா?

12 பேரை கொலை செய்ய யார் அதிகாரம் கொடுத்தது? தூத்துக்குடி தென் மாவட்டம் என நினைக்க வேண்டாம். 100 நாள் போராட்டத்தை தாண்டியும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குமா?

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர், எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உத்தரவு கொடுத்தார்களா? கொன்றுவிட்டு பணம் கொடுத்தால் சரியாகிவிடுமா? தூத்துக்குடி மக்களை தொட்டால் நடப்பதே வேறு என்று சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...