துப்பாக்கி சூட்டுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்.. மு.க ஸ்டாலின் கைது!

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் நடத்திய நிலையில் மு.க ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொலிசார் அவர்களை கைது செய்தனர். எழும்பூரில் கனிமொழி திமுகவினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கைது செய்யபட்டார்கள்.

தஞ்சையில் வடக்கு மாவட்டம் சார்பாக எஸ்.கே தலைமையிலும், திருவண்ணாமலையில் திமுக மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமையிலும் போராட்டம் நடந்த நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இது போல தமிழகமெங்கும் திமுக-வினர் போராட்டம் நடத்திய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...