ஓடும் பேருந்தில் நடந்த துயரம்! 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு டிரைவர் மரணம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவர் மரணமடைந்த நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45), இவரது மனைவி ராணி(வயது 35).

இவர்களுக்கு விஷால்(வயது 9), நிவாஸ்(வயது 7) இரு மகன்கள் உள்ளனர்.

ஆந்திர போக்குவரத்து துறையில் கடந்த 15 ஆண்டுகளாக அருணாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை திருமலையில் இருந்து சென்னைக்கு அருணாசலம் வந்துள்ளார், இரவு மீண்டும் திருமலைக்கு சென்றுள்ளார்.

அப்போது செங்குன்றம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது லேசான நெஞ்சுவலி இருந்ததால் மருந்து கடையில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஊத்துக்கோட்டை அருகே மீண்டும் நெஞ்சு வலித்துள்ளது, அங்கேயும் மருந்துகளை வாங்கி சாப்பிட்ட நிலையில் சுமார் 100 மீற்றர் தொலையில் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்துள்ளார்.

அப்படியே அவர் உயிர் பிரிந்ததும் தெரியவந்தது, இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பிச்சாட்டூர் பொலிசார், மாற்று டிரைவர் மூலம் பயணிகளை திருமலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers