வேறொருவர் மீது கொண்ட ஆசையால் கணவனை கொலை செய்த மனைவி: சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
771Shares
771Shares
lankasrimarket.com

தமிழகத்தில் தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருந்ததால், அவரை கொலை செய்தேன் என்று மனைவி கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலே வடிவேல் சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது வடிவேலுவின் சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தினால், செல்லம்மாள் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

வேலைக்கு சென்ற இடத்தில் செல்லம்மாளுக்கு கலையரசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நண்பர்களாக பழகிய இவர்களின் நட்பு, நாளைடைவில் தகாத உறவு வைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

இந்த தகவல் வடிவேலுவுக்கு தெரியவர உடனே, அவர் மனைவியான செல்லம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருப்பதால், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று செல்லம்மாள் முடிவு செய்துள்ளார்.

இதற்காக கலையரசனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

அதன் பின் வடிவேலுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது என்பதால், செல்லம்மாள் அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார்.

மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த போது, உடனடியாக கலையரசனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் போதையில் இருந்த வடிவேலுவை கம்பியால் தாக்கியுள்ளார். செல்லம்மாளும் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதனால் பரிதாபமாக இறந்த வடிவேலுவை ஒரு சாக்கு பையில் போட்டு, அதை நான்கு வழிச்சாலை வழியே செல்லும் ஓடையில் வீசியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல், காவல்நிலையத்திற்கு சென்று, கணவனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில், செல்லம்மாளுக்கும், கலையரசனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் முன்பு போல் இல்லாத காரணத்தினால், கணவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்று என் கணவனை நான் தான் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் தந்த தகவல் அடிப்படையில் நான்குவழிச்சாலை ஓடைக்கு சென்ற பொலிசார் அந்த சாக்குப்படையை மீட்டு பார்த்த போது, அதில் வடிவேலுவின் எலும்புக் கூட்டை பார்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கலையரசன் மற்றும் செல்லம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்