மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டி கொன்ற மகன்: தமிழகத்தில் பயங்கரம்!

Report Print Trinity in இந்தியா
102Shares
102Shares
ibctamil.com

மது அருந்த பணம் தராத தனது தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஊர் பெருங்களூர். இந்த பகுதியை சேர்ந்த விவசாயி சேகர். இவருக்கு வயது 50. மணிகண்டன், அருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். 27 வயதுடைய இந்த அருண் எந்த வேலைகும் போவதில்லை.

தினமும் மது அருந்து விட்டு ஊர் சுற்றி வருவது இவரது அன்றாட வேலை. மது அருந்துவதற்காக கேட்கும்போதே பணத்தை கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அன்று வீட்டில் அடிதடிதான்..

இந்நிலையில் வளர்ந்துவிட்ட பிள்ளையை அடிக்க மனமில்லாமல், வேலைக்கு போகும்படி புத்திமதி மட்டும் சொல்லியிருக்கிறார் தந்தை.

சம்பவத்தன்று வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டார். ஆனால் அவர் மறுக்கவும் ஆத்திரம் அடைந்த அருண், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தகப்பன் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக வெட்டினார். நிலைகுலைந்த தந்தை சேகர், அங்கேயே சுருண்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையை அரிவாளால் வெட்டிய தன் உடன்பிறந்த தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டையில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்கினை பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்