பத்து பேரால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞன்! துடிதுடிக்க பலியான பரிதாபம்

Report Print Kavitha in இந்தியா

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 53). இவருக்கு அப்புன், மணிபாரதி, விவேக், அரவிந்தன் 24, ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கும் அதே பகுதியை சார்ந்த மஞ்சுளா என்பருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாகவும், இதன்காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் மகன் ஆகஷ்ய் 22 என்பவரை, அப்புன் மற்றும் அரவிந்தன், விவேக் சேர்ந்து கொலை செய்ய முயன்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதனால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவை ரவியின் மூத்த மகன் அப்புன் தலையை வெட்டியதாக கூறப்படுகிறது.

இது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த கொலைமுயற்சிக்கு பழிவாங்கும் விதமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த அரவிந்தனை, பத்து பேர் கொண்ட கும்பல் அதே இடத்தில் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தனர்.

அரவிந்தனுடன் படுத்திருந்த குடியரசன் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலியே துடிதுடிக்க பரிதாபகமாக பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் விக்கி, ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்