சிவனுக்கு பூஜை செய்வதவாறே லிங்கத்தின் மீது விழுந்து இறந்த அர்ச்சகர்! சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் சிவனுக்கு பூஜை செய்தவாறே சிவலிங்கத்தின் மீது விழுந்து இறந்த அர்ச்சகர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவர் மாவட்டம் பீமாவரத்தில் புகழ்பெற்ற சோமேஷ்வரர் கோவில் உள்ளது.

பழங்கால கோவிலான இங்கு, நேற்று மூலவருக்கு இக்கோயிலின் பிரதான அர்ச்சகரான ராமாராவ் அபிஷேகம் செய்ய அதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால், இதைக் கண்ட சக அர்ச்சகர் ஒருவர் ஓடி வந்து அவரை நிதானமாக பிடித்து எழுப்பினார்.

எழுந்த பின்பு ஓய்வு எடுக்காமல் அவர் மீண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்த போது, கர்ப கிரகத்திலே மாரடைப்பு ஏற்பட்டு மூலவரின் சிலை மீது விழுந்து தனது உயிரை துறந்துள்ளார்.

இது தொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் மூலவர் சிலையின் மீதே விழுந்து இறந்துள்ளதால், அவரைக் காண அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் திரண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்