சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்...தன்னை பற்றி மீம்ஸ் போட்டவரை பாராட்டிய அமைச்சர்!

Report Print Vijay Amburore in இந்தியா

சமூக வலைத்தளங்களில் தன் தலையை வைத்து மீம்ஸ் போட்டவரை பாராட்டியதோடு, அதனை தான் ஜாலியாக எடுத்துக்கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்னர் அதிமுகவில் உள்ள பல்வேறு அமைச்சர்களும், நேரடியாகவே செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகின்றனர். அவ்வாறு பேட்டியளிக்கும் நேரங்களில் ஒரு சில அமைச்சர்கள் வாய் தவறி உண்மையை கூட உளறி விடுவதால், அதற்காகவே பொறுமையாக காத்திருக்கும் நெட்டிசன்கள், அமைச்சர்களை கலாய்க்கும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களை தெறிக்க விடுகின்றனர்.

அதிலும், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு மிகவும் துணிவாக பதில் சொல்லக்கூடிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீம்ஸ் கிரியேட்டர்கள் குறித்து காட்டமாக ஒருமுறை பதிலளித்திருந்ததால், அவரை மட்டும் தனியாக ஒரு பாணியில் வைத்து கலாய்த்து விடுகின்றனர். அந்த வரிசையில், சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலான, "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்" மீம்ஸ் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான சைபர் தொழில்நுட்பம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய தலையை வைத்து உருவாக்கபட்ட மீம்ஸ் நகைச்சுவையாக இருந்ததாகவும், அதனை தானே சமூகவலைத்தளத்தில் பரப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் ரூம்போட்டு யோசிப்பாங்களோ என அமைச்சர் பேச, அரங்கமே சிரிப்பலையில் நிறைந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்