சாப்பிட்டுக்கொண்டிருந்த என் கணவரை இழுத்து சென்றனர்! இயக்குனர் கவுதமனின் மனைவி கண்ணீர் பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரிப் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை பொலிசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் கவுதமனை இன்று கைது செய்துள்ளனர்.

இந்த கைது குறித்து கவுதமன் மனைவி மல்லிகா பேட்டியளித்துள்ளார். வீட்டில் சாப்பிட்டுகொண்டு இருந்தவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

அதில், அப்போதுதான் வீட்டிற்கு வந்து அவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

சரியாக 2.30 மணி இருக்கும். அப்போது வீட்டிற்குள் வேகமாக பொலிஸ் வந்தார்கள், சரியாக 12 பேர் வந்தனர். டிஎஸ்பி கூப்பிட்டதாக கூறினார்கள்.

என் கணவர் சம்மன் இருக்கிறதா என்று கேட்டதற்கு, சம்மன் இல்லை, டிஎஸ்பிதான் கூப்பிட்டாங்க, என்று கூறிவிட்டு சுற்றி நின்றார்கள்.

சும்மா விசாரணைதான் வாருங்கள் என்று கூறினார்கள், என் கணவர் சாப்பிட்டுவிட்டு வரலாமா என்று கேட்டார், அதற்கு சாப்பிடுங்கள் என்று கூறினார்கள்.

ஆனால் சாப்பிட சொல்லிவிட்டு அவரை சாப்பிட விடாமல் பொலிஸ் சுற்றி வளைத்துக் கொண்டது, ஒரு தீவிரவாதியைப் பொலிஸ் என கணவரை நடத்தியது, பின் சாப்பிடவிடாமல் அவரை இழுத்து சென்றனர்.

அவரை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று சொல்லவில்லை. எதற்காக என்றும் சொல்லவில்லை, இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

இவர் கேட்ட போது கூட சொல்லவில்லை, விசாரணை என்று மட்டும் சொன்னார்கள், வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்