நீ அனுபவிப்ப: குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பெண்- உருக்கமான கடிதம் சிக்கியது

Report Print Fathima Fathima in இந்தியா
1343Shares
1343Shares
lankasrimarket.com

மதுரையில் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, மினி லொறி டிரைவர்.

இவரது மனைவி மைக்கேல்ஜீவா, இவர்களுக்கு ஹரிதா(வயது 4), ஹரிகிஷோர் குமார்(வயது 3) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் காதல் திருமணம் செய்தாலும், மைக்கேல்ஜீவாவின் நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் வந்தது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு எழ மன உளைச்சலில் இருந்துள்ளார் ஜீவா.

பிரச்சனை தொடர்ந்து கொண்டே செல்ல, இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதன்படி நேற்று குழந்தைகளின் முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டிவிட்டு, தூக்கி மாட்டி தற்கொலை செய்தார்.

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் சோதனையிட்டதில் மைக்கேல்ஜீவா எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.

ஒன்றில், நான் போடும் உயிர் பிச்சை, யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, எனக்கு செய்த துரோகத்துக்கு நீ அனுபவிப்பாய்.

அதையும் நான் பார்க்கத்தான் போகிறேன், என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன்.

நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க என எழுதப்பட்டிருந்தது.

மற்றொரு கடிதத்தில், அம்மாவை பார்த்துக்கோங்க அக்கா, அனாதை போல் எங்களை எரித்துவிடவும், கணவர் கொள்ளி போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ராஜாவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்