பிரேசில் அணிக்காக அழுதுகொண்டே சண்டை போட்ட சிறுவன்! புதிய படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்

Report Print Vijay Amburore in இந்தியா

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பிரேசில் அணியை கிண்டல் செய்தவரிடம் அழுதுகொண்டே சிறுவன் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொல்லம் மாவட்டம் Paravur அருகே Puthenvelikkara என்ற கிராமத்தை சேர்ந்தவர் Karinjeri Davis. இவரது மகன் Evin, Infant Jesus Public School-ல் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். Evin பிரேசில் கால்பந்து அணியின் மிகப்பெரிய ரசிகன்.

காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம், பிரேசில் அணி தோற்றதால் Evin மிகுந்த கவலையில் இருந்துள்ளான். அப்பொழுது அர்ஜெண்டினா ரசிகரான எட்வின், பிரேசில் அணியை கிண்டல் செய்து சிறுவனை வம்பிழுத்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் அழுதுகொண்டே, அர்ஜெண்டினா ரசிகர் எட்வினிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்த எட்வின், Evin-க்கு தெரியாமல் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அனீஸ் என்ற இயக்குனர் சிறுவனை கண்டுபிடித்து "மதுரகினவு" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

முன்னதாக ரஷ்யாவில் வெகுவிமரிசையாக நடந்து முடிந்த, உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றதை, உலகமுழுவதுமுள்ள பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், கால்பந்து ரசிகர்களின் இதயத்தை வென்ற குரோஷியாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்