திருமணத்திற்கு மறுத்த காதலன்: கத்தி முனையில் கடத்திய காதலி!

Report Print Deepthi Deepthi in இந்தியா

பீகார் மாநிலத்தில் திருமணத்திற்கு மறுத்த காதலனை தனது உறவினர்களின் உதவுடன் காதலி கடத்தியுள்ளார்.

துர்கேஷ் சரண் (30) என்பவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் ஒருவரின் திருணத்திற்கு சென்றிருந்தபோது, பிரியாங்கா குமரி என்ற 23 வயது பெண்ணை பார்த்து காதலில் விழுந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பிரியங்கா பள்ளிப்படிப்பை கூட ஒழுங்காக முடிக்காதவர் என்ற உண்மை தெரிந்தவுடன், பிரியங்காவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி சென்றுள்ளார்.

சரணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன. இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தனது உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தனத உறவினர்களின் உதவியுடன் கத்தி முனையில் தனது காதலனை கடத்தி வேறு இடத்தில் அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்த தகவல் சரணின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததையடுத்து, பிரியங்காவின் உறவினர்கள் 5 பேரை ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்