வெளியானது கருணாநிதியின் புகைப்படம்! பட்டு வேஷ்டி சட்டையில் மறைந்த சூரியன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

காவேரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததையடுத்து, அவரது வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதியின் உயிரிழப்பால் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மிதந்துள்ளது. இதற்கிடையில் கருணாநிதியின் உடலை மெரினால் அடக்கம் செய்வதற்கு ஸ்டாலின் தரப்பில் முதல்வரிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், சட்டசிக்கல்கள் கருதி மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டு, காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெரினாவில் இடம் கோரி நீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்