தொண்டர்கள் புடை சூழ.. கனிமொழி இல்லத்திற்கு புறப்பட்டது கருணாநிதி உடல்

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அவரது மகள் கனிமொழி குடியிருக்கும் சிஐடி காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைப்பாட்டால் காவேரி மருத்துவமனையில் வைத்து காலமானார். அவரது உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சுமார் 3 மணி நேரம் குடும்பத்தாரும், கட்சியினரும், அஞ்சலி செலுத்தினர். நள்ளிரவு 1 மணி வரை குடும்பத்தினர் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பின்னர் சிஐடி காலனி இல்லத்துக்கு அவர் உடல் ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் வழியில் திமுகவினர் வீர வணக்க முழக்கங்களை இட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்