கேரளாவில் வீட்டின் மொட்டை மாடியில்.. பெண்களின் ஆச்சரியப்படுத்திய செயல்! கண்கலங்க வைக்கும் படம்

Report Print Vijay Amburore in இந்தியா

வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இரண்டு கேரளா பெண்கள், தேங்க்ஸ் என மொட்டை மாடியில் எழுதியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது.

இதில் வீட்டின் மாடிகளில் சிக்கி வெளியில் கூட செல்ல முடியாமல் தவித்து வந்த பொதுமக்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் சேர்ந்து பத்திரமாக மீட்டெடுத்தனர்.

அந்த வகையில் கடந்த 17-ம் தேதியன்று இல்லத்தில் சிக்கியிருந்த இரு பெண்களை ஹெலிகாப்டரின் உதவியுடன் விமான படையை சேர்ந்த விஜய் வர்மா பத்திரமாக மீட்டிருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரு பெண்களும், வீட்டின் மொட்டை மாடியில் தேங்க்ஸ் என பெயிண்டால் எழுதியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்