அய்யோ...என்னை காப்பாற்றுங்கள் என கதறிய கேரள பெண் : அந்த நிமிடத்தை விளக்கும் மாற்றுதிறனாளி

Report Print Deepthi Deepthi in இந்தியா

இயற்கை பேரிடர் கேரளாவைப் புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்களும் நடந்துள்ளது.

அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கால்களை இழந்த மாற்றுதிறனாளி நபர் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய நிமிடங்களை அவரே விவரித்துள்ளார்.

செங்கன்னூர் மாவட்டம், அரட்டுப்புழா ஊரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). மாற்றுத் திறனாளியான இவர், கால்களால் நடக்க இயலாதவர். இந்த நிலையிலும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

செங்கன்னூர் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. அப்போது, என்னைக் காப்பாற்றுங்கள் என்ற சத்தம் கேட்டது.

அந்த தருணத்தில் என்னைப் பார்த்த அப்பெண், தன்னைக் காப்பாற்ற இவரால் முடியாது என்று நிச்சயம் நினைத்திருப்பார். ஏன் என்றால் எனக்குத்தான் கால்கள் சரியாக இல்லையே.

ஆனால், உயிருக்குப் போராடிய பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதிலிருந்தது. உடனடியாக, வாழைமரம் மற்றும் மரப் பட்டை அமைக்கப்பட்ட தற்காலிக படகுபோல் ஒன்றைச் செய்தேன். அதன் மூலம் அவரைக் காப்பாற்றினேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், இப்பெண்ணின் கணவரும் இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் தனது மனைவியுடன் சேர்ந்து வெள்ளத்தில் நீந்தி செல்ல இயலவில்லை. இதனால் தனது மனைவியை காப்பாற்றிய மாற்றுதிறனாளி முதியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்