பிரபல நடிகர் காலமானார்: சடலத்தை பார்த்து கண்ணீர் விட்ட திரையுலகினர்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் விஜய் சவன் உடல்நலக்குறைவால் தனது 63-வது வயதில் காலமானார்.

மராத்தி திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றவர் விஜய் சவன்.

350-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் விஜய்யின் உடல்நிலை சில நாட்களாக மோசமானதை தொடர்ந்து நேற்று அவர் காலமானார்.

விஜய்யின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சக நடிகர்கள் கண்ணீர் விட்டு அழுதது மனதை உருக்கும் விதத்தில் இருந்தது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்