கைவிட்ட பெற்றோர்! குழந்தைகள் பறிபோன சோகம்.. அபிராமியின் கணவர் விஜய் எங்குள்ளார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

குழந்தைகளை இழந்த விஜய் தனது மாமனார் வீட்டில் தற்போது தங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த விஜய் தனது மனைவி அபிராமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடிக்க தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் பெற்ற குழந்தைகளை இழந்து பைத்தியம் பிடித்தது போல் தவித்து வருகிறார் விஜய்.

குழந்தைகளை இழந்த துக்கம் மற்றும் மனைவியின் துரோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி சுந்தரம் அபிராமியை கைப்பிடித்ததால் பெற்றோர் அவரை கைவிட்டு விட்டனர்.

இந்நிலையில் தனி ஆளாக தவிக்கும் விஜய்யை ஆறுதலாக அபிராமியின் பெற்றோர் தங்களுடனே தங்க வைத்து கொண்டுள்ளனர்.

அன்புக்காக ஏங்கும் விஜய் மாமனாரின் கோரிக்கையை ஏற்று அவர் வீட்டில் தங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers