பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில், பயணிகளுடன் வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கினர். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பேருந்தில் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பகுதியில் ஒரே மாதத்தில் நடக்கும் 3வது விபத்தில் இது மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்