மனைவியின் உடல் பருமனை விமர்சித்தவர்கள்: தக்க பதிலடி கொடுத்த கணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனது மனைவியின் உடல் பருமனை கிண்டல் செய்த நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கணவர்.

சுஜித்-சுவேதா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் சுஜித் தனது பேஸ்புக் பக்கத்தில், தங்கள் தேன்நிலவு கொண்டாட்டத்தை பதிவு செய்திருந்தார்.

இவர்கள் பதிவுகளை சிலர் விமர்சித்தனர். குறிப்பாக சுவேதாவின் உடல் பருமனை குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தான் அதற்கு பதிலளிக்கும் வகையில் சுஜித் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், உடல் பருமன் என்பதில் ஒன்றுமில்லை. இவளுக்குள் ஒரு சிறிய இதயம் உள்ளது. அது மிகவும் அழகானது. உடல் பருமனாக இல்லாதவர்கள் தான் வாழவேண்டும் என்றில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு உடல் பருமனாக இருப்பது தான் பிடிக்கும்.

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உடல்பருமன், வெளிப்புற அழகு இதெல்லாம் முக்கியமில்லை. நல்ல மனது தான் முக்கியம். அது இவளிடம் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்