கண்டித்த தந்தை... திட்டமிட்டு கொலை செய்த மகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலம் பகுதியில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை திட்டமிட்டு கொலைசெய்த இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர், சேலம் அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு பழக்கம் இருந்துவந்தது.

ராஜாவே இவரை மருத்துவமனையில் விட்டுச் செல்லுவதும், மாலை பணி முடிந்ததும் அழைத்துச் செல்லுவதுமாக இருந்துள்ளார்.

இது, சசிகலாவின் தந்தை தொப்பக் கவுண்டருக்குத் தெரியவர, சசிகலாவைக் கண்டித்துள்ளார்.

ஆனால் சசிகலா, தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்காமல், ராஜாவிடம் நெருக்கமாகவே பழகிவந்துள்ளார்.

இதையடுத்து தமது மகளை தொப்பகவுண்டர் எச்சரிக்கை செய்து மிரட்ட, அவர் கோபம் அடைந்தார். ஒருகட்டத்தில், சசிகலாவும் அவரின் கள்ளக்காதலன் ராஜாவும் சேர்ந்து தொப்பக்கவுண்டரை கொலைசெய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

அதையடுத்து, 2015-ம் ஆண்டு வீராணத்தில் உள்ள ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகிய ரவுடிகளின் துணையோடு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தொப்பக்கவுண்டரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் தொப்பக்கவுண்டரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்துவந்தது.

இந்த விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில் சசிகலா, ராஜா, ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்