புழல் சிறையில் பிரியாணி சமைக்கும் கைதிகள்.. வைரலாகும் வீடியோ

Report Print Kavitha in இந்தியா

சமீபத்தில் புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வசதிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை வளாகத்தில் தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள சமையலறையில், கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவில் கைதிகள் சமையலறையில் காய்கறிகளை நறுக்கி பிரியாணி சமைக்க தயார் செய்வது போன்ற காட்சி சமூகவலைத்தில் வைரலாகியுள்ளது.

இது குறித்த சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா சிறையில் ஆய்வு மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், 18 டி.வி.க்கள், ரேடியோ, செல்போன்கள், கட்டில்கள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்