நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்: ரத்தகாயத்துடன் பொதுவெளியில் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதாவை, 2-வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பியால் தாக்கிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார்

அவரின் இரண்டாவது மனைவி பேபி என்கிற ஹமீதாவின் மகள் லைலா அலிகான் (22) மற்றும் மகன் மீரான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அதில், தன் மீது தாக்குதல் நடக்கும் போது, மன்சூர்அலிகான் வேடிக்கை பார்த்ததாகவும், மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers