வைரமுத்துவைப் பற்றி இலங்கை பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்: சின்மயி அதிரடி

Report Print Santhan in இந்தியா
1395Shares
1395Shares
ibctamil.com

வைரமுத்து பற்றி இலங்கைப் பெண் ஒருவர் சின்மயிடம் பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை டுவிட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சின்மாயி இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில், நான் இலங்கையைச் சேர்ந்த பெண், வைரமுத்து யார் என்று எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் அவருக்கு சொந்தமான பெண்கள் விடுதி கோடம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.

அதில் வைரமுத்து விடுதிக்கு வருகிறார் என்றால் எப்போதும் முன்பே அறிவித்துவிடுவார்களாம் 'யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது' . அப்படி மீறி வந்தாலும் துப்பட்டா அணியாமல் வரக்கூடாது என வைரமுத்து மனைவி கட்டுப்பாடு போட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குற்றச்சாட்டை வைரமுத்து மறுத்துள்ளார். அதே வேளையில் சின்மயிக்கு ஆதரவுகள் பெறுகிவருகிறது.

மேலும் #IStandWithChinmayi என்ற ஸ்பெஷல் Tag ஐ பயன்படுத்தி பலரும் கருத்து கூறிவருகிறார்கள். அதை குறிப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்