அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை! தமிழ்பட நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு

Report Print Kabilan in இந்தியா
147Shares
147Shares
ibctamil.com

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து, படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சில படங்களில் நடித்த நடிகை புளோரா சைனி, ஹிந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி தாடையை உடைத்ததாகவும் சமீபத்தில் பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தவிர வேறு எவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவர் கூறுகையில்,

கவுரங் தோஷி எனக்கு செய்த கொடுமையை பார்த்து ஐஸ்வர்யா ராய் கோபம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கவுரங் தயாரிக்க இருந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா வெளியேறினார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கும் நபரின் படத்தில் நடிக்க முடியாது என்று அவர் கூறினார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த பிரச்சனை குறித்து நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன், பேசுகிறேன், இனியும் தொடர்ந்து பேசுவேன்.

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் குரல் பலருக்கும் கேட்கிறது. Me Too இயக்கம் தான் தற்போது தேவை. இது வலுப்பெறும் என்று நம்புகிறேன்’ என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்