என்னையும், ஸ்டாலினையும் இணைத்து வதந்தி: எரிச்சல் அடைந்த நடிகை பாத்திமா பாபு

Report Print Deepthi Deepthi in இந்தியா
146Shares
146Shares
ibctamil.com

செய்திவாசிப்பாளர் மற்றும் நடிகையான பாத்திமா பாபுவிடம் , சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று பாத்திமா பாபு விளக்கம் அளித்தும், இது தொடர்பான மீம்ஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது, இந்தியாவில் புயலை கிளப்பியுள்ள #MeToo சர்ச்சையில் ஸ்டாலின் மீது பாலியல் புகார் சொல்லுங்கள் என்று சிலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்..

இதனால் கோபமான பாத்திமா கடுமையாக எச்சரித்துள்ளார். பல வருடங்களாக சம்பந்தமும் இல்லாத என்னையும் ஸ்டாலினையும் இணைத்து வதந்தி பரவி வருகிறது.

இப்படியிருக்கையில் மீண்டும் என் பெயரை இழுத்தால் அவதூறு வழக்குபோடுவேன் என எச்சரித்துள்ளதுடன் மீம்களை பரப்பாமல் போய் புள்ளகுட்டிய படிக்கவைங்க மக்கா என்று நக்கலும் அடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்