கணவனுக்காக காத்திருந்த கர்ப்பிணி மனைவிக்கு 3 ஆண்களால் நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in இந்தியா

மேற்குவங்க மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை 3 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயது கர்ப்பிணி பெண், வேலைக்கு சென்றிருந்த தனது கணவருக்காக வீட்டில் காத்திருந்துள்ளார். அப்போது, உள்ளூர் நபர்கள் மூன்று பேர் சேர்ந்த கதவை தட்டியுள்ளார்கள்.

தனது கணவர் தான் வந்துவிட்டார் என்று நினைத்து கதவை திறந்துள்ளார் கர்ப்பிணி பெண். உள்ளே புகுந்த 3 ஆண்கள், இப்பெண்ணை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பித்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த கணவன், தனது மனைவி சுயநினைவற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதையடுத்து, நடந்தவை குறித்து மனைவி தனது கணவரிடம் தெரிவித்ததையடுத்து, இதுகுறித்து கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்