நாட்டையே உலுக்கிய பிரனாய் ஆணவக்கொலை! குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானாவில் ஆணவப்படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான பெருமல்லா பிரனாயி இந்த ஆண்டு ஜனவரி மாத துவக்கத்தில், அம்ருதா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டார்.

இதற்கு அம்ருதாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மகளின் கர்ப்பத்தை அறிந்து மேலும் கோபமடைந்துள்ளார்.

கர்ப்பத்தை கலைக்க பலமுறை வறுபுறுத்தியும் அம்ருதா மறுப்பு தெரிவித்ததால், மருத்துவமனைக்கு வெளியில் கூலிப்படையை வைத்து கணவர் பிரணாயியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்.

இந்திய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அம்ருதாவின் தந்தையும், தொழிலதிபரான மாருதி ராவ் உட்பட குற்றவாளிகள் அஸ்கார் அலி, முகம்மது அபுல் பாரி, டி ஷ்ரவன் மற்றும் எஸ். சிவா ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் ஜாமீன் கோரி நல்கொண்டா மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதற்கு அம்ருதாவும், பிரனாயின் தந்தை பாலசுவாமியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாருதி ராவை வெளியில் விட்டால் தனக்கும், தன்னுடைய குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers