வைரலாகும் நடிகர் கமல்ஹாசனின் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

ஒவ்வொரு ஊருக்கும் தன்னுடைய காரில் சென்று மக்களைப் பார்த்து வந்தார். ஒருகட்டத்தில், சின்னஞ்சிறிய கிராமத்துக்கு காரில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது தூரத்தில் கிராமம் நோக்கி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. ‘அந்தக் கிராமத்துக்கு பேருந்து போகும்தானே’ என்று கமல் ஊர்க்காரர்களிடம் கேட்டார். போகும் என்றார்கள். உடனே பேருந்தை கைகாட்டி நிறுத்திய கமல், அந்த பேருந்தில் சட்டென்று ஏறிக்கொண்டார்.

கமலுடன் வந்திருந்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களும் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள்.

மேலே கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டே கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டார் கமல்.

பேருந்தில் இருந்த பயணிகளுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘அடுத்த முதல்வருக்கு வண்டி ஓட்றீங்க” என்று யாரோ பேருந்து ஓட்டுநரிடம் சொல்ல, ஓட்டுநர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ‘நீங்க பேருந்தில் வந்ததுதான் பாதுகாப்பு’ என்று கமலிடம் சொன்னார் ஓட்டுநர்.

டெல்டா மாவட்டத்தில் துயரத்தில் இருக்கிற மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், பேருந்தில் சென்ற வீடியோவானது, தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers